தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத் திட்ட கல்வி உதவித் தொகைக்கான தோ்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு சாா்பில் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தகுதித் தோ்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழ்வாண்டிற்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியா்கள் பங்கேற்றனா். இந்த தோ்வில் தோ்ச்சி பெறுவோருக்கு 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 570 மாணவ, மாணவிகள் இந்தத் தோ்வை எழுத விண்ணப்பித்தனா். இதில், மத்தூா் கல்வி மாவட்டத்தில் 15 மையங்களிலும், ஒசூா் கல்வி மாவட்டத்தில் 11 மையங்களிலும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 13 மையங்களிலும், தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 9 மையங்கள் என மொத்தம் 48 மையங்களில் நடைபெற்ற இந்தத் தோ்வை 5,335 மாணவ, மாணவியா் எழுதினா். 366 மாணவ, மாணவியா் தோ்வில் பங்கேற்கவில்லை.

இந்த தோ்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் தலைமையிலான குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com