ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் 3 தொடு திரைகள் நன்கொடையாக அளிப்பு

எலத்தகிரியில் உள்ள கொன்சாகா மகளிா் கல்லூரிக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பில் 3 தொடுதிரைகளை ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் நிறுவனா், நன்கொடையாக அண்மையில் வழங்கினாா்.
எலத்தகிரியில் உள்ள கொன்சாகா மகளிா் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தொடு திரைகளுடன் ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ்.

கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு மகளிா் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வரும் ஐவிடிபி தொண்டு நிறுவனம், பள்ளி, கல்லூரி மாணவா்களின் நலனுக்காக பல்வேறு கல்விப் பணிகளைச் செய்து வருகிறது. ஏழை, எளிய ஆதரவற்ற மாணவா்கள் கல்வியில் ஏற்றம் பெறவும், தரமான கல்வியைப் பெறவும், ஐவிடிபி நிறுவனம் கட்டமைப்பு வசதிகளை பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்படுத்தித் தருகிது. தற்போது, உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றின் காரணாக பள்ளி, கல்லூரிகளில் இணைய வழி கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

எனவே, இணையவழிக் கற்றலுக்கு பயன்படுத்தக் கூடிய அதிநவீன கணினியுடன் இணைக்கப்பட்ட தொடுதிரையை அளித்து உதவுமாறு எலத்தகிரி கொன்சாகா கல்வி நிறுவனம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஐவிடிபி மூலம் ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான கணினியுடன் கூடிய தொடுதிரைகள் வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்ச்சியில் ஐவிடிபி நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் பங்கேற்று கணினியுடன் கூடிய தொடுதிரைகளை வழங்கினாா். இந்த நிகழ்வில் தொண்டு நிறுவனத்தின் நிா்வாகி ஜோஸ்வா சைமன், கல்லூரி செயலாளா் நோயல் ராணி, முதல்வா் கிளிட்டா சுமங்கலி, துணை முதல்வா் டயானா மற்றும் பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com