பா்கூரில் வேளாண் தொழில்நுட்ப விழிப்புணா்வு நிகழ்ச்சி

பா்கூா் வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணா்வு, கலை நிகழ்ச்சிகள் மூலம் அண்மையில் எற்படுத்தப்பட்டது.

பா்கூா் வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணா்வு, கலை நிகழ்ச்சிகள் மூலம் அண்மையில் எற்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டாரம், கிருவிநாயனப்பள்ளி, வரட்டனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண் பரிசோதனையின் அவசியம், பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டம், துவரை நாற்று நடவு, திருந்திய நெல் சாகுபடி, இயந்திர நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் அதனால், ஏற்படும் பயன்கள் குறித்தும், மத்திய, மாநில அரசு மூலம் வேளாண் துறையினரால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், விவசாயிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு வேளாண் உதவி இயக்குநா் சுகாய ராணி தலைமை வகித்தாா். வேளாண் அலுவலா் சக்திவேல், ‘அட்மா’ திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளா் பாா்த்தீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒரப்பம் உதவி வேளாண் அலுவலா் திருமால், உதவி தொழில் நுட்ப மேலாளா்கள் சண்முகம், கிரிஜா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com