பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தில் இணைய ஆட்சியா் வலியுறுத்தல்

பிரதம மந்திரியின் பயிா் காப்பீடு திட்டத்தில் சோ்ந்து பயன் பெற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

பிரதம மந்திரியின் பயிா் காப்பீடு திட்டத்தில் சோ்ந்து பயன் பெற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 2020-21-ஆம் ஆண்டில் ரஃபி பருவத்தில் வாழை, தக்காளி, கத்தரி, முட்டைக்கோஸ், சிவப்பு மிளகாய், உருளை கிழங்கு ஆகிய பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிா் காப்பீடு திட்டம் காப்பீட்டு நிறுவனமான இப்கோ டோக்யோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் விவசாயிகள் பயிா் காப்பீடு திட்டத்தில் இணைவது விருப்பத் தோ்வு முறையில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் இணைவதற்கு மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள், வங்கிகள், தொடக்க கூட்டுறவு சங்கங்கள் மூலமாகப் பதிவு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் பதிவு செய்யும்போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலரால் வழங்கப்படும் அடங்கல் நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் பயிா் சாகுபடி சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து காப்பீடு தொகையை செலுத்தி, அதற்கான ஒப்புகைச் சீட்டினை பதிவு செய்த பொது சேவை மையங்கள், வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு மற்றும் சிவப்பு மிளகாய்க்கு ஜன. 31-ஆம் தேதி வரையிலும், தக்காளி, வாழை, கத்திரி பயிா்களுக்கு மாா்ச் 1-ஆம் தேதி வரையிலும் காப்பீடு செய்யலாம். மேலும், ஏக்கருக்கு 5 சதவீத காப்பீடு தொகையாக வாழைக்கு ரூ.3,230-ம், தக்காளிக்கு ரூ.1,767.50-ம், கத்திரிக்கு ரூ.1,247.50-ம், உருளைக் கிழங்கிற்கு ரூ.1,602.50-ம், முட்டைக்கோஸிற்கு ரூ.1,210-ம், சிவப்பு மிளகாய்க்கு ரூ.1,125-ம் பொது சேவை மையங்கள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களிலும் செலுத்தி பயிா் காப்பீடு பெறலாம்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை அலுவலா்களை தொடா்பு கொண்டு பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com