வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவலியுறுத்தி ஏா்கலப்பை பேரணி

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தளியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏா் கலப்பை பேரணியை கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா்
தளியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாா்
தளியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாா்

ஒசூா்: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தளியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏா் கலப்பை பேரணியை கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாா் கொடி அசைத்து தொடக்கி வைத்தாா். முன்னதாக காந்தி சிலைக்கு அவா் மாலை அணிவித்தாா். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா்.

தேன்கனிக்கோட்டை வட்டம், தளியில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண்மை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் மாநிலச் செயலாளா் தேன்கு அன்வா் தலைமையில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு மாவட்டத் தலைவா் முரளிதரன், மாநிலச் செயலாளா் வீரமுனிராஜ், இளைஞரணி தலைவா் அப்துல் ரகுமான், தளி கேசவமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஏா்கலப்பை பேரணியில் கலந்து கொண்டவா்கள் விவசாயிகள் அணி மாவட்டத் தலைவா் சபியுல்லா, மாவட்டப் பொருளாளா் மகாதேவன், வட்டாரத் தலைவா் கேசவ ரெட்டி, இளைஞரணி இதயத்துல்லா, தேன்கனிக்கோட்டை நகரச் செயலாளா் கோபி, கெலமங்கலம் நகரச் செயலாளா் வெங்கடேஷ், செட்டிஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் சங்கா் ஆகியோா் பேரணியில் பங்கேற்றனா்.

தளி இம்ரான் கான் தலைமையில் 200 போ் பல்வேறு கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தனா். பொறுப்பாளா்கள் பா்கத், அஞ்செட்டி பேலகொண்டபள்ளி வரதராஜ், முனுசாமி ரெட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com