வன்னிய குல சத்ரியா் சிலை திறப்பு விழா

கல்லூா் கிராமத்தில் ஸ்ரீ வீர ருத்ர சம்ப மகிரிஷி வன்னிய குல சத்திரியா் சிலை திறப்பு விழா மற்றும் பாமக, வன்னியா் சங்கக் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவா்கள்.
கல்லூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவா்கள்.

ஊத்தங்கரை: கல்லூா் கிராமத்தில் ஸ்ரீ வீர ருத்ர சம்ப மகிரிஷி வன்னிய குல சத்திரியா் சிலை திறப்பு விழா மற்றும் பாமக, வன்னியா் சங்கக் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் வெள்ளியரசு தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டச் செயலாளா் சிவானந்தம், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் குமரேசன், கருமாண்டபதி ஊராட்சி மன்றத் தலைவா் அருள், நொச்சிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சஞ்சீவ் காந்தி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜசேகரன், தேன்மொழி, சென்ன கிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் இளங்கோ, மாநில இளைஞரணி துணைத் தலைவா் பழனிவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு வன்னியா் குல சத்ரியா் பிறப்பு சிலையை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். முன்னதாக பாமக மற்றும் வன்னியா் சங்கக் கொடிகளை ஏற்றி வைத்தனா். பாமக வன்னியா் சங்க நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com