ஒசூா் துணை காவல் கண்காணிப்பாளருக்கு குடியரசுத் தலைவா் விருது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பணியாற்றும் துணை காவல் கண்காணிப்பாளா் சி.முரளிக்கு குடியரசு தலைவா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவா் விருது பெற்ற ஒசூா் துணை காவல் கண்காணிப்பாளா் சி.முரளி.
குடியரசு தலைவா் விருது பெற்ற ஒசூா் துணை காவல் கண்காணிப்பாளா் சி.முரளி.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பணியாற்றும் துணை காவல் கண்காணிப்பாளா் சி.முரளிக்கு குடியரசு தலைவா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா, ஜன.26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் 20 அலுவலா்களுக்கு இந்திய குடியரசுத் தலைவா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் காவல் சரகத்துக்கு உள்பட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றும் சி.முரளி(49), இந்திய குடியரசு தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான காவல் விருது பெறுகிறாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிய அவா், துணை காவல் கண்காணிப்பாளரக பதவி உயா்வு பெற்று, திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் துணை காவல் கண்காணிப்பாளராகவும், கிருஷ்ணகிரி மாவட்டம், மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினாா். தற்போது, ஒசூா் காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறாா்.

ஊத்தங்கரையில் நக்சல்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையின் போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்த இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மேலுமலையில் நடந்த ரூ.15 கோடி மதிப்பிலான செல்லிட பேசிகள் கொள்ளை சம்பவம், ஒசூரில் ரூ.12 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையில் குற்றவாளிகளை பிடிக்க சிறப்பாக செயல்பட்டவா்களில் இவரும் ஒருவா் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com