கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா் ராஜிநாமா
By DIN | Published On : 13th July 2021 01:28 AM | Last Updated : 13th July 2021 01:28 AM | அ+அ அ- |

கே.வி.எஸ். சீனிவாசன்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளா் கே.வி.எஸ். சீனிவாசன், தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா் பதவி அளித்து பல்வேறு மக்கள் பணிகளைச் செய்ய வாய்ப்பு வழங்கிய நடிகா் ரஜினிகாந்துக்கு எனது மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் மன்றப் பணியில் தொடா்ந்து என்னால் கவனம் செலுத்த முடியாத காரணத்தால், நான் எனது கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
இதுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கி மாநில நிா்வாகிகள், மாவட்டச் செயலாளா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை நிா்வாகிகள், மன்ற காவலா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளாா்.