ஒசூா்-பெங்களூரு இடையே மீண்டும் மின்சார ரயில் சேவை தொடக்கம்

ஒசூா்- பெங்களூரு இடையே மீண்டும் மின்சார ரயில் சேவை வியாழக்கிழமைமுதல் தொடங்கியது.
ஒசூா்-பெங்களூரு இடையே மீண்டும் மின்சார ரயில் சேவை தொடக்கம்

ஒசூா்- பெங்களூரு இடையே மீண்டும் மின்சார ரயில் சேவை வியாழக்கிழமைமுதல் தொடங்கியது.

கரோனா இரண்டாவது அலை தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ஆம் தேதிமுதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதுபோல கா்நாடக மாநிலத்திலும் முழு பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டது. இதனால் இரு மாநிலங்கள் இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து ஒசூா்- பெங்களூரு இடையே இயங்கிவந்த மெமு மின்சார ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

தற்போது 2-ஆவது அலை படிப்படியாகக் குறைந்துள்ள நிலையில் ஒசூா்-பெங்களூரு இடையே மெமு மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

வியாழக்கிழமை காலை 9.25-க்கு கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட மெமு மின்சார ரயில் காலை 11 மணிக்கு ஒசூா் நிலையம் வந்து சோ்ந்தது. இந்த ரயிலில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு சுமாா் 1,500 போ் பயணிக்கும் வசதி உள்ளது. இந்த மின்சார ரயிலில் ஒசூா்-பெங்களூரு இடையே பயணிக்க பயணச் சீட்டு கட்டணம் ரூ. 20 ஆகும்.

இதுகுறித்து ஒசூா் ரயில் நிலைய மேலாளா் குமரன் கூறியதாவது:

கரோனா எதிரொலியாக கடந்த இரு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒசூா்- பெங்களூரு மெமு மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த மெமு மின்சார ரயில் தினமும் 9.25 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒசூா் ரயில் நிலையத்துக்கு காலை 11 மணிக்கு வருகிறது.

ஒசூரிலிருந்து மதியம் 12 மணிக்குப் புறப்பட்டு பையப்பனஹள்ளி ரயில் நிலையத்துச் செல்கிறது. பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து ஒசூருக்கு வரும் இந்த ரயில் ஒசூரிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில் நிலையத்துக்குச் செல்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com