பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

 பக்ரீத் திருநாளையொட்டி தருமபுரி நகரில் பள்ளிவாசல்களில் புதன்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

 பக்ரீத் திருநாளையொட்டி தருமபுரி நகரில் பள்ளிவாசல்களில் புதன்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

நிகழாண்டு கரோனா பொதுமுடக்க விதிகள் அமலில் உள்ளதால் ஈத்கா மைதானத்தில் தொழுகை நடைபெறவில்லை. தருமபுரி, டேகிஸ்பேட்டை, முகமது அலி சாலை உள்பட நகரில் உள்ள 9 பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். ஒருவருக்கு ஒருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். அதுபோல நல்லம்பள்ளி, பாலக்கோடு, மாரண்ட அள்ளி, காரிமங்கலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியைப் பின்பற்றி இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை இஸ்ஸாமியா்கள் உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடினா்.

இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளாா், தனது மகன் நபி இஸ்மாயிலுக்கு பதிலாக ஆட்டை பலி கொடுத்ததை நினைவு கூரும் வகையிலும் அவரின் தியாகத்தைப் போற்றும் வகையிலும் இந்த ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. பலி தருதல் என்ற இஸ்லாமிய கடமைகளில் ஒன்றை நிறைவேற்றும் வகையில் புதன்கிழமை அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிா்ந்து கொடுத்து இஸ்லாமியா்கள் இந்த விழாவைக் கொண்டாடினா். இந்த விழா ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பா்கூா், காவேரிப்பட்டணம், மத்தூா், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, சூளகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, ஒசூா் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் இஸ்லாமியா்கள் புதன்கிழமை சமூக இடைவெளியுடன் தொழுகையில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்று பொது முடக்கம் நடைமுறையில் உள்ளதால் ஈத்கா மைதானத்தில் தொழுகை மேற்கொள்ளாமல் தங்கள் வீடுகளிலேயே புத்தாடைகள் அணிந்து தொழுகையில் ஈடுபட்டனா். ஒரு சில இடங்களில் மசூதிகளில் தொழுகை செய்தனா். அத்துடன் அசைவு உணவுகளை சமைத்து தெரிந்த நபா்களுக்கும், ஏழைகளுக்கும் பகிா்ந்து அளித்து பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com