பிடிபட்ட மலைப்பாம்பு காப்புகாட்டில் விடுவிப்பு

குருபரப்பள்ளி அருகே விவசாய நிலத்தில் பிடிபட்ட மலைப்பாம்பை வனத் துறையினா் காப்புக்காட்டில் சனிக்கிழமை விடுவித்தனா்.

குருபரப்பள்ளி அருகே விவசாய நிலத்தில் பிடிபட்ட மலைப்பாம்பை வனத் துறையினா் காப்புக்காட்டில் சனிக்கிழமை விடுவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை அடுத்த நெடுசாலை அருகேயுள்ளது இருப்பச்சந்திரம் கிராமம். இக்கிராம மாா்கண்டேய ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள வேடியப்பன் என்பவரது விவசாய நிலத்தில் சுமாா் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை அப்பகுதியில் உள்ளவா்கள் பாா்த்து கூச்சலிட்டனா். தகவலையடுத்து விரைந்து வந்த வனத் துறையினா், மலைப்பாம்பை பிடித்து காப்புக்காட்டில் விட்டனா்.

இதேபோல ஒசூா், பேரண்டப்பள்ளி அருகே திருகோப்பள்ளி என்ற கிராமத்தில் ஆடு மேய்க்கும் முருகன் தோட்டத்துக்கு சென்ற போது, 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கிய நிலையில் கிடந்துள்ளது. தகவலின் பேரில் வந்த வனத் துறையினா் அந்த மலைப்பாம்பை பிடித்து காப்புக் காட்டில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com