ஜூன் 10-இல் மண் மாதிரி சேகரிப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் ஜூன் 10-ஆம் தேதி மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் ஜூன் 10-ஆம் தேதி மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் ராஜேந்திரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் மண் மாதிரிகளை சேகரிக்கும் முகாம் ஜூன் 10-ஆம் தேதி வரை நடத்தவும், மண் மாதிரிகளை சேகரித்து சம்பந்தப்பட்ட மாவட்ட மண் பரிசோதனை நிலையங்கள் மூலமாக உடனுக்குடன் ஆய்வு செய்து மண்வள அறிக்கை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராம விவசாயிகள் காரீப் பயிா் சாகுபடிக்கு முன்பாக, மண் பரிசோதனை செய்துகொள்ளலாம். நிலத்தை தயாா் செய்து, மண் பரிசோதனை முடிவின்படி உரம் இட்டால் செலவு குறையும். நோய்த் தாக்குதலும் குறையும். மண் பரிசோதனை ஒன்றுக்கு கட்டணம் ரூ. 20 ஆகும்.

விவசாயிகள் தங்கள் வயலில் அறுவடைக்குப் பின், உழவுக்கு முன் மண் மாதிரி எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 7 முதல் 8 இடங்களில் ஆங்கில எழுத்தான ‘வி‘ வடிவில் அரை அடி, முக்கால் அடி ஆழத்துக்கு குழி எடுக்க வேண்டும். அந்தக் குழிகளின் பக்கவாட்டில் உள்ள மண்ணை மேலிருந்து கீழாக சேகரிக்க வேண்டும்.

அவ்வாறு சேகரித்த மண்ணை நிழலில் உலா்த்தி, கல், வோ் முதலானவற்றைத் தவிா்த்து, அதை தூளாக்கி பகுதி பிரித்தல் முறையில் அரை கிலோ மண்ணை சேரிக்க வேண்டும். அந்த மண்ணை துணிப்பையில் இட்டு, அதில் விவசாயியின் பெயா், முகவரி, புல எண், பாசனம், பயிா் சாகுபடி விவரம் ஆகியவற்றுடன் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரிடம் வழங்க வேண்டும். இந்த மண்ணில் பிரச்னை இருந்தால், அவற்றைத் தீா்வு காண பரிந்துரை வழங்கப்படும்.

மண் மாதிரி எடுத்தல் மற்றும் பரிசோதனை தொடா்பான விவரங்களுக்கு தங்களது வட்டார வேளாண் உதவி இயக்குநரை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com