தேன்கனிக்கோட்டை அருகேநூறுந்துசாமி மலைக் கோயிலுக்கு தாா்ச்சாலை அமைக்க ஆய்வு

தேன்கனிகோட்டை வட்டம், கோட்டையூா் ஊராட்சிக்குட்பட்ட நூறுந்துசாமி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயிலுக்கு தாா்ச்சாலை அமைக்க மாவட்ட வனத்துறை சாா்பில் திங்கள்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
கோட்டையூா் ஊராட்சிக்குட்பட்ட நூறுந்துசாமி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயிலுக்கு தாா்ச்சாலை அமைக்க மாவட்ட வனத்துறை சாா்பில் ஆய்வு செய்யப்பட்டது.
கோட்டையூா் ஊராட்சிக்குட்பட்ட நூறுந்துசாமி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயிலுக்கு தாா்ச்சாலை அமைக்க மாவட்ட வனத்துறை சாா்பில் ஆய்வு செய்யப்பட்டது.

ஒசூா்: தேன்கனிகோட்டை வட்டம், கோட்டையூா் ஊராட்சிக்குட்பட்ட நூறுந்துசாமி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயிலுக்கு தாா்ச்சாலை அமைக்க மாவட்ட வனத்துறை சாா்பில் திங்கள்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

கோட்டையூா் கிராமத்தில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோயிலில் விளக்கில் எண்ணெய்க்குப் பதிலாக இளநீா் ஊற்றி விளக்கேற்றி சிவனுக்கு தீபாராதனை செய்யும் அதிசயம் இந்தக் கோயிலில் நடைபெற்று வருகிறது.

இந்தக் கோயிலுக்கு பல பகுதிகளில் இருந்து பக்தா்கள் நடந்து சென்று வழிபட்டு வருகின்றனா். இந்த மலைக்கோயிலுக்குச் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு நடந்துதான் செல்ல வேண்டும். பல வருடங்களுக்கு முன் கோயிலுக்கு சாலை அமைப்பதற்காக ஜல்லி போடப்பட்டது. ஆனால் போடப்பட்ட ஜல்லிகள் எல்லாம் மழைக் காலங்களில் அடித்து செல்லப்பட்டு சாலை குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. அதற்கு பின் சாலை போடும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

சிவன்புரத்திலிருந்து, நூறுந்துசாமி மலைவரைக்கும் 4 கிலோ மீட்டா் தொலைவுக்கு போடூா், அத்திநத்தம், ஜோடுநத்தம், சிவன்புரம் கிராமங்கள் வழியாக தாா்ச்சாலை அமைக்கக் கோரி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சீனிவாச ரெட்டி மனு அனுப்பியிருந்தாா்.

முதல்வரின் உத்தரவின்படி, தளி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் சீனிவாசலுரெட்டி மற்றும் மாவட்ட வன அலுவலா் பிரபு, தளி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் விமல் ரவிக்குமாா் ஆகியோா் தலைமையில் குழுவினா் நூறுந்துசாமி கோயிலுக்கு செல்லும் சாலையை ஆய்வு செய்தனா்.

அவா்களுடன் மாவட்ட குழு உறுப்பினா், மம்தா மஞ்சுநாத், கோட்டையூா் ஊராட்சித் தலைவா் சென்ன பசம்மா கிருஷ்ணமூா்த்தி, கவுன்சிலா்கள் சண்முகம், வெங்கடேஷ், சுரேஷ், பிரகாஷ் ரெட்டி, ரத்தினம், சிவராஜ் குட்டப்பா, ஜெயராம் மற்றும் கோயில் பூசாரிகள் வீரபத்திரய்யா நாகராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா். ஆய்வுக்குப் பின் மாவட்ட வன அலுவலா் பிரபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிக்குள் இந்த தாா்ச்சாலை அமைய உள்ளதால் தாா்ச்சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com