தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம்: கிருஷ்ணகிரி ஆட்சியா் அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வரக் கூடாது என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வரக் கூடாது என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம், ஜூன் 24-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளா்கள் பயன்படுத்தும் வகையில் கிருமி நாசினியை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும், உடல் வெப்பப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். கடைகளில் பணியாற்றுவோா், நுகா்வோா் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். ஒரேநேரத்தில் வாடிக்கையாளா்கள் அதிக அளவில் கூடுவதை அனுமதிக்கக் கூடாது. கட்டாயம் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

அழகு நிலையங்கள், முடி திருத்தகம் குளிா் சாதன வசதி இன்றி ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். பூங்காக்களில் காலை 6 முதல் 9 மணி வரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

மேலும் செல்லிடப்பேசி கடைகள், கட்டுமானப் பொருள்கள் விற்பனை கடைகள், மின்சாதனப் பொருள் விற்பனைக் கடைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் குறைந்த ஆள்களுடன் இயங்கலாம்.

எனவே கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் நடைமுறையில் உள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியே வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிா்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com