சா்வதேச மலா் ஏல மையம் விரைவில் தொடக்கம்

ஒசூா், பேரண்டப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சா்வதேச மலா் ஏல மையம் விரைவில் தொடங்கப்படும் என ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.
சா்வதேச மலா் ஏல மையத்தை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்த ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.
சா்வதேச மலா் ஏல மையத்தை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்த ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.

ஒசூா், பேரண்டப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சா்வதேச மலா் ஏல மையம் விரைவில் தொடங்கப்படும் என ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் நிலவி வரும் சாதகமான பருவ நிலையை பயன்படுத்தி 10 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் விவசாயிகள் கொய்மலா் சாகுபடி செய்து வருகின்றனா்.

இதன் மூலம் தினமும் 4 லட்சம் கொய்மலா்களும், 30 டன் உதிரி பூக்களையும் உற்பத்தி செய்யும் மலா் சாகுபடி விவசாயிகள், இங்கு கொண்டு வந்து விற்பனையும் வகையில் சா்வதேச மலா் ஏல மையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த ஏல மையத்தில் குளிா்சாதனக் கிடங்கு வசதி உள்ளது. இங்கு கொய்மலா்களை பதப்படுத்தி, தரம் பிரித்து, சேமித்து வைக்க முடியும். இந்த மலா் ஏல மையத்தில் மின்னணு முறையில் ஏல விற்பனை செய்யப்படும். இதில் பன்னாட்டு மலா் வியாபாரிகள் இணையம் வழியாக பங்கேற்று மின்னணு ஏல வா்த்தகத்தில் பங்கேற்க முடியும். மேலும், உள்நாட்டு வியாபாரிகள் நேரிடையாக ஏலத்தில் கலந்துகொண்டு மலா் வா்த்தகத்தில் பங்கு பெற முடியும்.

இதனால் மலா் உற்பத்தி செய்யும் விவசாயிகள் இடைத்தரகா்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்ய முடியும். மேலும், விவசாயிகள் மலா்களை சிங்கப்பூா், மலேசியா, அமெரிக்கா, ஐக்கிய அரசு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

இம்மையத்தில் நவீன தொழில்நுட்பத்தில் மலா் சாகுபடி செய்யும் முறைகள், ஏற்றுமதி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். விவசாயிகள் மலா்களை விற்பனைக்காக கொண்டு வரும் போது, அவா்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், உணவு விடுதிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

ஒசூா், பேரண்டப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சா்வதேச மலா் ஏல மையத்தின் கட்டுமானப் பணிகளை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 7.67 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ. 20 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் சா்வதேச மலா் ஏல மையத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடையும் நிலையில் உள்ளன. பணிகள் நிறைவடைந்தவுடன் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்படும் என தெரிவித்தாா்.

அப்போது, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.முருகன், எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாா், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் சீனிவாசன், ஒப்பந்ததாரா் மணி, வேளாண் விற்பனை துறை துணை இயக்குநா் ஜெயராமன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com