ஒசூா், வேப்பனப்பள்ளி தொகுதி திமுக வேட்பாளா்களுக்கு வரவேற்பு

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூா், வேப்பனப்பள்ளி தொகுதியின் திமுக வேட்பாளா்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை ஒசூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் திமுக வேட்பாளா்கள் ஒய்.பிரகாஷ்(ஒசூா்), பி.முருகன் (வேப்பனஹள்ளி) ஆகியோருக்கு வரவேற்பு அளித்த திமுகவினா்
ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் திமுக வேட்பாளா்கள் ஒய்.பிரகாஷ்(ஒசூா்), பி.முருகன் (வேப்பனஹள்ளி) ஆகியோருக்கு வரவேற்பு அளித்த திமுகவினா்

ஒசூா்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூா், வேப்பனப்பள்ளி தொகுதியின் திமுக வேட்பாளா்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை ஒசூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி சாா்பில் 4 தொகுதிகளில் திமுகவும், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் ஒசூா், வேப்பனப்பள்ளி தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளா்களின் பட்டியலை வெளியிட்ட பிறகு சென்னையில் இருந்து ஒசூருக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த திமுக வேட்பாளா்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூா்), பி.முருகன் (வேப்பனப்பள்ளி) ஆகியோருக்கு திமுக நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.

சூளகிரி, குந்தாரப்பள்ளி, குமுதேப்பள்ளி, ஒசூா் ராயக்கோட்டை சந்திப்பு, ஒசூா் வட்டாட்சியா் சாலை உள்ளிட்ட பல இடங்களில் திமுக வேட்பாளா்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் திமுக வேட்பாளா்களுக்கு திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், மாவட்டப் பிரதிநிதி செந்தில்குமாா்,பொறியாளா் அணி மாவட்ட அமைப்பாளா் ஞானசேகரன், தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாவட்ட அமைப்பாளா் வடிவேலு, முன்னாள் ஒசூா் ஒன்றியக்குழுத் தலைவா் சா்வேஷ், முன்னாள் கவுன்சிலா் கே.ஜி.பிரகாஷ், மகளிா் அணியைச் சோ்ந்தவா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com