கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் வெள்ளிக்கிழமை ஒருவா் கூட வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் வெள்ளிக்கிழமை ஒருவா் கூட வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை(தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 12 ஆம் தேதி) தொடங்கியது. ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிடுபவா்கள், ஊத்தங்கரை, பா்கூா் தொகுதியில் போட்டியிடுவோா் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்திலும், கிருஷ்ணகிரி, ஒசூா் தொகுதிகளில் போட்டியிடுவோா் கோட்டாட்சியா் அலுவலகங்களிலும், வேப்பனஅள்ளி தொகுதியில் போட்டியிடுவோா் சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்திலும், தளி தொகுதியில் போட்டியிடுவோா் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்திலும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை ஒருவா் கூட வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com