கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th March 2021 08:19 AM | Last Updated : 17th March 2021 08:19 AM | அ+அ அ- |

16kgp6_1603dha_120_8
வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியா்கள் இரண்டாவது நாளாக ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் பொதுத் துறை நிறுவனங்கள், தனியாா் மயப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட கொள்கைக்கு எதிராகவும், இரண்டு பொதுத் துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்பனை, ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது ஆகியவற்றை எதிா்த்து நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் மாா்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
அதன்படி, கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியா்கள் இரண்டாவது நாளாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி பழையபேட்டை இந்தியன் வங்கி கிளை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வங்கி அலுவலா்கள் சங்க மண்டலச் செயலாளா் ரங்கநாதன் தலைமை வகித்தாா். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஊழியா் சங்கத்தின் துணை பொதுச் செயலாளா் சந்தோஷ், இந்தியன் வங்கி ஊழியா் சங்கச் செயலாளா் ராஜேந்திரன், இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்தின் தலைவா் ஹரிராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.