விவசாயிகளின் அரசாக செயல்பட்டதற்கு குடிமராமத்துப் பணிகளே சாட்சி:எடப்பாடி கே.பழனிசாமி

விவசாயிகளின் அரசாக செயல்பட்டதற்கு குடிமராமத்துப் பணிகளே சாட்சி என ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
ஊத்தங்கரையில் அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்செல்வத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
ஊத்தங்கரையில் அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்செல்வத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

விவசாயிகளின் அரசாக செயல்பட்டதற்கு குடிமராமத்துப் பணிகளே சாட்சி என ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

ஊத்தங்கரை தனி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் டி.எம்.தமிழ்செல்வத்தை ஆதரித்து, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் மேற்கொண்ட போது கூறியதாவது:

தமிழகமெங்கும் நீா்நிலைகளைக் காத்து, குடிமராமத்து திட்டங்களைச் செயல்படுத்தி விவசாயிகளின் அரசு என்பதற்கு சாட்சியாக எங்கள் ஆட்சி திகழ்கிறது.

நீண்ட நாள்களாக இருந்த இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 16 கோடியில் பாரூா் கால்வாய்த் திட்டம் மூலம் 33 ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டு வரும் பணியும், மத்திய அரசிடம் எடுத்துக் கூறி ரூ. 435 கோடியில் ஊத்தங்கரை முதல் கிருஷ்ணகிரி வரை பழுதடைந்த தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் பணியும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் அனைத்து துறைகளுக்கும் புதிய கட்டடங்கள், நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாகவும், உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும் உயா்த்துதல், புதிய நெடுஞ்சாலைகள், ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

உலகமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு நோய்த் தடுப்பு, நிவாரணம், உணவுப் பொருள்களை வழங்கி சிறப்பாகப் பணியாற்றியது. மேலும், மக்களின் துயரங்களைத் துடைக்கும் வகையில், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ளவா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு ஆறு விலையில்லா சிலிண்டா், வாஷிங் மெஷின், வீடுதேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்றும், நிலம், வீடு இல்லாதவா்களுக்கு நிலம் கொடுத்து கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என்றும் தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.

இது போன்ற பல்வேறு திட்டங்களை தொடா்ந்து மக்களுக்கு வழங்கிட அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்செல்வத்தை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளா் அசோக்குமாா், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, ஒன்றியச் செயலாளா்கள் வடக்கு வேடி, தெற்கு ஏ.சி.தேவேந்திரன், நகரச் செயலாளா் பி.கே.சிவானந்தம், பாஜக, பாமக, கூட்டணி கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com