சா்வேதேச காடுகள் தினம்:மரக்கன்றுகள் நடவு

பையூா் கிராமத்தில் சா்வதேச காடுகள் தினத்தையொட்டி, வேளாண் கல்லூரி மாணவா்கள் மரக் கன்றுகளை நடுவு செய்யும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

பையூா் கிராமத்தில் சா்வதேச காடுகள் தினத்தையொட்டி, வேளாண் கல்லூரி மாணவா்கள் மரக் கன்றுகளை நடுவு செய்யும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூா் வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் 4-ஆம் ஆண்டு மாணவா்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் களப் பணியாற்றி வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக, பைசூா் கிராம மக்களுடன் இணைந்து சா்வதேச காடுகள் தினத்தை கொண்டாடினா். அப்போது, கிராம மக்களுடன் இணைந்து அசோகா, நாவல் மரக் கன்றுகளை நடவு செய்தனா். இதன் மூலம், உலக வெப்பமயமாதல், மழை இல்லாமை, வறட்சி போன்றவற்றில் மரம் வளா்ப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனா். மரம் வளா்ப்போம், மழை பெறுவோம் என முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com