குந்தாரப்பள்ளி சந்தையில் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

குந்தாரப்பள்ளி சந்தையில் அதிமுக வேட்பாளா் கே.பி.முனுசாமி எம்.பி.யை ஆதரித்து, பாஜகவினா் வாக்கு சேகரிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
குந்தாரப்பள்ளி சந்தையில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக, அதிமுகவினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ளது குந்தாரப்பள்ளி சந்தை. ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள இந்தச் சந்தையானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூடும்.

இந்தச் சந்தையில், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதியின் பாஜக பொறுப்பாளா் அன்பசரன் தலைமையில் பாஜவினா், அதிமுகவினா் இணைந்து அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவும், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் கே.பி.முனுசாமி எம்.பி.க்கு ஆதரவாகவும் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com