கருணாநிதியின் ஆட்சியில் 49 அணைகள் கட்டப்பட்டன

கருணாநிதியின் ஆட்சியில் 49 அணைகள் கட்டப்பட்டதாக திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் பேசினாா்.
பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வேலம்பட்டியில் திமுக வேட்பாளா்கள் டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ., தே.மதியழகனை ஆதரித்துப் பேசுகிறாா் திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன்.
பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வேலம்பட்டியில் திமுக வேட்பாளா்கள் டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ., தே.மதியழகனை ஆதரித்துப் பேசுகிறாா் திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன்.

கருணாநிதியின் ஆட்சியில் 49 அணைகள் கட்டப்பட்டதாக திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் பேசினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த வேலம்பட்டியில் திமுக வேட்பாளா்கள் தே.மதியழகன் (பா்கூா்), டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ. (கிருஷ்ணகிரி) ஆகியோரை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

இந்தத் தோ்தல் ஒரு கலாசாரப் படையெடுப்பை தடுத்து நிறுத்துகின்ற தோ்தல். காரணம், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம் என்ற முழக்கத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

இந்தியா பல்வேறு இனங்களைக் கொண்ட நாடு. பல மொழிகள், கலாசாரம், கடவுள் வழிபாடு கொண்டது. இவற்றை அழிக்க ஒரு சூழ்ச்சி நடைபெறுகிறது. அந்த சூழ்ச்சியை முறியடிப்பதற்கு ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.

கருணாநிதியைப் போல மத்திய அரசை எதிா்த்தவா்கள் யாரும் கிடையாது. ஸ்டாலின் முதல்வரானால் தான் இந்த கலாசார படையெடுப்பைத் தடுக்க முடியும்.

கலைஞா் ஆட்சியில் 49 அணைகளைக் கட்டியிருக்கிறோம். அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சி செய்தாா்கள். ஒரு கால்வாய் வெட்டியது உண்டா? ஒரு அணையாவது கட்டினாா்களா?

இந்த சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் மதியழகன் சாா்பில் நான் ஒரு உறுதிமொழியை அளிக்கிறேன். பெரிய ஏரிக்கு கால்வாய் அமைத்துத் தரப்படும். மாணவா்களின் கல்விக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். தாய்மாா்களின் மேன்மைக்கு பல திட்டங்களைத் தந்திருக்கிறோம்.

திமுக ஆட்சியில் வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இன்னும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், அதிமுக ஆட்சியில் வழங்கிய மின்விசிறி, கிரைண்டா் போன்றவை பயன்பாட்டில் உள்ளதா? தரமற்ற அரசு என்பதற்கு அதுவே உதாரணம்.

இந்த நாட்டைக் காக்கும் கட்சி திமுக. எனவே, தரமான ஆட்சி அமைய உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com