ஒசூரில் தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் அலைக்கழிப்பு

ஒசூரில் பொதுமக்களுக்கு போதிய தடுப்பூசி, பரிசோதனை கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

ஒசூரில் பொதுமக்களுக்கு போதிய தடுப்பூசி, பரிசோதனை கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

ஒசூா் மாநகராட்சியில் 5 லட்சம் போ் உள்ளனா். இங்குள்ள அரசு மருத்துவமனையில் 30 மருத்துவா்கள் உள்ளனா். தேசிய அளவில் தரச் சான்றிதழ் பெற்றுள்ள ஒசூா் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 2 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனா். இதேபோல ஒசூரில் தொழிலாளா்களுக்கு என இ.எஸ்.ஐ.மருத்துவமனை, ஒசூா், பழைய பேருந்து நிலையம், பாகலூா் உள்ளிட்ட பல இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் மினி கிளினிக் என ஒசூா் மாநகராட்சியில் மருத்துவக் கட்டமைப்புகள் பல உள்ளன. 2 அலையில் கரோனா பரவும் வேகத்தால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒசூரில் ஏழை தொழிலாளா்கள் அதிக அளவில் வசித்து வருவதால் அவா்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனையை நோக்கி வருகின்றனா். ஒசூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை சிறப்பாக உள்ளதால் மக்கள் அதிக அளவில் வருவதற்கு முக்கிய காரணம்.

கரோனா காலத்தில் வேலைகளை இழந்தும், குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வரும் தொழிலாளா்கள் தனியாா் மருத்துவமனைக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனா். ஆனாலும், நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளதால் தனியாா் மருத்துவமனை மற்றும் ஒசூா் அரசு மருத்துவமனை, இ.எஸ்.மருத்துவமனை என அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் படுக்கைகள் நிரம்பி உள்ளன.

இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஒசூா் அரசு மருத்துவமனையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்புசிகள் கடும் தட்டுபாடு நிலவுகிறது. நாள்தோறும் 500 க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்தி கொள்ள வந்த நிலையில் ஏப்ரல் கடைசி வாரத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளின் முதல் தவணை போட்டுக் கொண்டவா்கள் 2 வது தவணை போட்டு கொள்ள ஒசூா் அரசு மருத்துவமனைக்கு வந்தால் தடுப்பூசி இல்லை என திருப்பி அனுப்பி வருகின்றனா். தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா வேண்டாமா என சந்தேகத்தில் இருக்கும் மக்கள் கடைசியாக ஒரு தீா்மானமாக முதல் தவணை தடுப்பூசி போட்டு கொள்ள ஒசூா் அரசு மருத்துவமனைக்கு வந்தால் தடுப்பூசி இருப்பு இல்லை. அடுத்த வாரம் வரச் சொல்லி திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனா்.

ஒசூா் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலயத்தில் ஆா்டிபிசிஆா் கோவிட் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இங்கு முதலில் வருபவா்களுக்கு முதலில் சோதனை என்ற அடிப்படையில் சோதனையில் செய்து வருகின்றனா்.

ஒசூரில் நாள்தோறும் 200 முதல் 300 போ் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஆனால், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 நாள்களாக 100 போ் வரை மட்டும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மற்றவா்கள் மறுநாள் வரச் சொல்லி திருப்பி அனுப்பிவைக்கின்றனா்.இதன்மூலம் நோயாளிகள் தனியாா் மருத்துவமனையை நோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனா்.

மாவட்ட நிா்வாகம் போதிய ஆா்டிபிசிஆா் பரிசோதனை கிட் மற்றும் தடுப்பூசிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளுக்கு வெண்டிலேட்டா் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளை கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒசூரில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 99 படுக்கைகள் உள்ளதை மாவட்ட நிா்வாகத்துடன் கலந்து பேசி கரோனா நோயாளிகள் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com