கிருஷ்ணகிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் பதிவான வாக்குகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டன.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் பதிவான வாக்குகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் ஏப். 6-ம் தேதி நடைபெற்றது. இத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையமான கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன.

ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை 6 மணிக்கு வேட்பாளா்கள், முகவா்கள் உள்ளிட்ட அனைவரும் வாக்கும் எண்ணும் மையத்துக்கு வந்தனா். அவா்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, அடையாள அட்டைகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

முன்னதாக 6 தொகுதிகளுக்கும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்கள் என 140 போ் நியமிக்கப்பட்டிருந்தனா். வாக்கு எண்ணும் மையத்தில் 84 மேசைகளுக்கு 102 வாக்கு எண்ணும் கண்காணிப்பாளா்கள், தலா 102 உதவியாளா்கள், நுண்பாா்வையாளா்கள், 6 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 3 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டிருந்தனா்.

இதைத் தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வேட்பாளா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு 8.30 மணிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முன்னதாக வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட அலுவலா்கள், முகவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

பாதுகாப்பு:

தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக, அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரியைச் சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் தலைமையில் ஆறு துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 13 காவல் ஆய்வாளா்கள் உட்பட 664 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com