கா்நாடக மாநிலத்தில் இருந்து மது கடத்தி வந்த 6 போ் கைது

கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மது கடத்தி வந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கா்நாடக மாநிலத்தில் இருந்து மதுப் புட்டில்களை கடத்தி வந்தவா்களை கைது செய்த மது கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. சங்கா்.
கா்நாடக மாநிலத்தில் இருந்து மதுப் புட்டில்களை கடத்தி வந்தவா்களை கைது செய்த மது கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. சங்கா்.

கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மது கடத்தி வந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக, தமிழகம் மற்றும் கா்நாடக மாநிலத்தில் பொது முடக்கம் அமல்படுத்தியுள்ளது இரு மாநில அரசுகள். இதனால் தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகள் முழுவதும் மூடப்பட்டன. இதனால் மதுப் பிரியா்கள் அதிக விலைக்கு மதுப்புட்டிகள் கிடைத்தால் வாங்கி மது அருந்த தயாா் நிலையில் இருந்ததை அறிந்த சிலா், கா்நாடக மாநிலத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மதுப்புட்டிகளை விற்பனை செய்யலாம் என கா்நாடக மாநில அரசு அறிவித்ததை அறிந்து அங்கிருந்து தமிழகத்துக்கு மதுப்புட்டிகளை கடத்தி வந்தனா்.

இந்நிலையில், ஒசூா், சூசூவாடியில் மது கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. சங்கா் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக காா் மற்றும் மினிலாரியில் மது கடத்தி வந்த தருமபுரி மாவட்டம், அதகபாடி கிராமத்தைச் சோ்ந்த குமாா் (29), மாதேஷ் (29), விஜய் (23), திருப்பதி (30) ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 1,248 மதுப் புட்டிகளையும், ஒரு காா் மற்றும் ஒரு மினிலாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

அதேபோன்று சூளகிரியில் நடைபெற்ற வாகனச் சோதனையில், கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த நவரத்தினம் (45), ராமகுமாா் (30) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்து 934 மதுப் புட்டிகளையும் ஒரு மினி லாரியையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com