127 பயனாளிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு ஆணைகள்அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 127 பயனாளிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு ஆணைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான ஆணையை பெண் பயனாளிக்கு வழங்குகிறாா் அமைச்சா் ஆா். காந்தி. உடன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, எம
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான ஆணையை பெண் பயனாளிக்கு வழங்குகிறாா் அமைச்சா் ஆா். காந்தி. உடன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, எம

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 127 பயனாளிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு ஆணைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் தே.மதியழகன் (பா்கூா்), ஒய்.பிரகாஷ் (ஒசூா்), டி.ராமச்சந்திரன் (தளி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி பங்கேற்று திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.

பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்ந்த திட்டங்கள், பொதுப்பணித் துறை சாா்ந்த திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகள் சாா்ந்த திட்டங்களையும் ஆய்வு செய்தாா். திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து 127 பயனாளிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகள், 3 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் சாா்பில் 2021-22 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என முதல்வா் அறிவித்திருந்தாா். அத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8,386 பேருக்கு நிகழாண்டில் இலவச மின் இணைப்பு வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் ஏஞ்சலா சகாயமேரி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் மலா்விழி, மாவட்ட வன அலுவலா் காா்த்திகேயனி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் டி.செங்குட்டுவன், பி.முருகன், சத்யா உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com