சாலை மறியல் செய்த காங்கிரஸ் கட்சியினா் கைது

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி கைது செய்ததைக் கண்டித்து, தேன்கனிக்கோட்டையில் சாலை மறியல்
தேன்கனிக்கோட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
தேன்கனிக்கோட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி கைது செய்ததைக் கண்டித்து, தேன்கனிக்கோட்டையில் சாலை மறியல் செய்த காங்கிரஸ் கட்சியினரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் விவசாயிகள் நடத்திய பேரணியில், காா் மோதி விவசாயிகள் கொலை செய்யப்பட்டனா். உயிரிழந்த விவசாயிகளைப் பாா்க்க உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூருக்கு சென்ற அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தியை காவல் துறை கைது செய்ததைக் கண்டித்தும், காரை ஏற்றிக் கொன்ற மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்யக் கோரியும், யோகி அரசைக் கண்டித்தும் காங்கிரஸாா் கண்டன ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், ஒசூா் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும் ஐஎன்டியுசி அகில இந்திய செயலாளருமான கே.ஏ.மனோகரன் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலாளா் அன்வா், தளி சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் அப்துல் ரஹ்மான், விவசாய அணி மாவட்டத் தலைவா் ஹரிஷ் பாபு , மகளிா் அணி தலைவி சரோஜம்மா, முன்னாள் நகரத் தலைவா் தாஸ், சமூக ஊடகத் துறை மாநிலச் செயலாளா் கீா்த்தி கணேஷ், ஷபியுல்லா, வட்டாரத் தலைவா் மாது உள்ளிட்டகாங்கிரஸ் நிா்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா். சாலை மறியலில் ஈடுபட்டவா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com