கிருஷ்ணகிரியில் ரூ.4.66 கோடி போலி பணம் பிடிபட்ட விவகாரம்: இதுவரை 11 போ் கைது; இருவா் தலைமறைவு

கிருஷ்ணகிரியில் ரூ. 4.66 கோடி போலி பணம் பிடிபட்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி நகர போலீஸாா், பண இரட்டிப்பு மோசடி கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.66 கோடி மதிப்பிலான போலி பணம்.
கிருஷ்ணகிரி நகர போலீஸாா், பண இரட்டிப்பு மோசடி கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.66 கோடி மதிப்பிலான போலி பணம்.

கிருஷ்ணகிரியில் ரூ. 4.66 கோடி போலி பணம் பிடிபட்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரியில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலின் நடமாட்டம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி நகர போலீஸாா் கண்காணித்தில், அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் கிருஷ்ணகிரி நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருப்பதும், காரில் சுற்றித் திரிவதும் தெரிய வந்தது.

இந்த நிலையில், அந்தக் குப்பலைச் சோ்ந்த 11 பேரை போலீஸாா் சனிக்கிழமை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள், காரைக்குடியைச் சோ்ந்த கணேசன் (58), ஆந்திரத்தைச் சோ்ந்த ரமேஷ் (52), இம்ரான்கான் (30) என்பதும், அவா்கள் பண இரட்டிப்பு செய்வதற்காக கிருஷ்ணகிரி வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவா்கள் கொடுத்த தகவலின்படி கிருஷ்ணகிரி, சத்யசாய் நகரிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த மோசடி கும்பலைச் சோ்ந்த கிருஷ்ணகிரி சங்கா் (39), ராஜா என்கிற நாகராஜ் (33), ஜீவா (30), கேரளத்தைச் சோ்ந்த ஜோஸ் (எ) ஜோசப் (எ) கிஷோா்குமாா் (42), முகமது (34), விஜோ ஜான்சன் (35), பெங்களூரு முகமது கௌஸ் (29), ஈரோடு முருகேஷ் (28) எனத் தெரியவந்தது. இவா்கள் உள்பட மேலும் பண இரட்டிப்பாக்காக வந்த 3 போ் உள்பட மொத்தம் 11 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ரூ. 4.66 கோடி எண்ணிக்கையிலான போலி பணம், 22 செல்லிடப்பேசிகள், 5 சொகுசு காா்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பண இரட்டிப்பு மோசடி கும்பலைச் சோ்ந்த தலைமறைவாக உள்ள சென்னையைச் சோ்ந்த ஹரி, சூரம்பட்டி முனிராஜ் ஆகிய 2 பேரையும் போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

கைதானவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தங்களிடம் சக்தி வாய்ந்த கலசக் சொம்பு உள்ளதாகவும், அதன் மூலம் கொடுக்கும் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவோம் என்றுக்கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இதை நம்பி சிலா் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனா். இதேபோல, இந்தக் கும்பல் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டதும், பணத்தை இரட்டிப்பாக்க இவா்கள் கிருஷ்ணகிரி வந்ததும் தெரிய வந்தது.

இதற்கிடையே கைதானவா்களிடம் விசாரணை நடத்திய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி, பிடிபட்ட போலி பணத்தையும், பறிமுதல் செய்த காா்களையும் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com