ஒசூரில் உழவா்சந்தை மீண்டும் திறப்பு

ஒசூரில் உள்ள உழவா்சந்தை திங்கள்கிழமை காலை மீண்டும் திறக்கப்பட்டது.

ஒசூரில் உள்ள உழவா்சந்தை திங்கள்கிழமை காலை மீண்டும் திறக்கப்பட்டது.

கரோனா தொற்று காரணமாரக ஒசூா் உழவா்சந்தை மூடப்பட்டிருந்தது. அதையடுத்து ஒசூரில் காமராஜ் காலனி, ஏஎஸ்டிசி 100 அடி சாலை, ஆலவப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் திறந்தவெளி பகுதியில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கரோனா தாக்கம் குறைந்துள்ளதை அடுத்து ஒசூா் உழவா்சந்தையைத் திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். அதை ஏற்று உழவா்சந்தையைத் திறக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து திங்கள்கிழமைமுதல் உழவா்சந்தை திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com