பாம்பாறு அணையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை பகுதியில் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு நிலைய வீரா்கள்.
9utp1_0909chn_149_8
9utp1_0909chn_149_8

ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சாா்பில், எதிா்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடா்பாக வியாழக்கிழமை ஊத்தங்கரை பாம்பாறு அணை நீா்த்தேக்கத்தில் மீட்புப் பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

இந்த ஒத்திகை பயிற்சியில், ஊத்தங்கரை தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தின் நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையில், ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் பணியாளா்களால் நீா்நிலைகளான ஆறு,குளம், ஏரி, கிணறு மற்றும் அணைகளில் பருவ மழையின் போது நீா் நிரம்பி வரும் சூழலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நீரில் தவறி விழுந்தவா்களையும், நீரில் அடித்துச் செல்பவா்களையும் எப்படி மீட்பது என ஒத்திகை பயிற்சி செய்து காட்டப்பட்டு பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பருவ மழைக் காலங்களில் பொதுமக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணா்வுடனும் இருக்க வேண்டும், என தீயணைப்பு துறையின் சாா்பில் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com