தென்பெண்ணையாற்றின் குறுக்கே பாலம் கட்ட கோரிக்கை

ஊத்தங்கரையை அடுத்த ஒட்டம்பட்டி அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட எம்.பி. அ.செல்லக்குமாா்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட எம்.பி. அ.செல்லக்குமாா்.

ஊத்தங்கரையை அடுத்த ஒட்டம்பட்டி அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

ஒட்டம்பட்டியில் செல்லும் தென்பெண்ணையாற்றில் கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடும் போதும், மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதும், அனுமன்தீா்த்தம் பகுதியில் இருந்து ஒட்டம்பட்டி செல்ல 20 கி.மீ. தொலைவு சுற்றி வர வேண்டி உள்ளது.

மேலும், ஆற்றின் மறுகரையில் அமைந்துள்ள சுமாா் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆற்றைக் கடந்து சென்று வரும் நிலையில், மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, பள்ளி, கல்லூரி மாணவா்கள் 20 கி.மீ. தொலைவு சுற்றி வர வேண்டிய நிலையுள்ளது. தென்பெண்ணையாற்றின் குறுக்கே பாலம் கட்ட கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா் நேரில் சென்று ஆற்றில் இறங்கி ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கொட்டாரப்பட்டியில் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 3.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணியா் நிழற்கூடத்தை திறந்து வைத்தாா்.

இதில், காங்கிரஸ் மாநிலச் செயலாளா் ஆறுமுகம், வட்டார வளா்ச்சி அலுவலா் (திட்டம்) மகேஸ்வரன், மூங்கிலேரி ஊராட்சி மன்றத் தலைவா் உஷாநந்தினி வஜ்ஜிரவேல், வட்டாரத் தலைவா் ரவி, ஒப்பந்ததாரா் விஜயகுமாா், சொக்கலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com