கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 776 மையங்களில் தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 776 மையங்களில் மாபெரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 776 மையங்களில் தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 776 மையங்களில் மாபெரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கிருஷ்ணகிரி பயணியா் விடுதி கூட்டரங்கில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ஆதிதிராவிடா் நலன் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அரசு இணைச் செயலருமான எஸ்.பழனிசாமி தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அதனடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவா்கள் பயனடையும் வகையில், கரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 வரை 10 ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வாா்டு பகுதிகளிலும், ஊராட்சி, கிராமப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி வளாகங்களிலும், அரசு ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனைகளில் என 776 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்களில் அரசு மருத்துவா்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை செவிலியா்கள், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும், சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் பொதுமக்களை மையங்களுக்கு அழைத்து வரும் பணிகளையும், கல்வித் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் பணிகளிலும் ஈடுபடுத்த உள்ளனா்.

தொடா்ந்து, ஆதிதிராவிடா் நலன் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அரசு இணைச் செயலா் எஸ்.பழனிசாமி, மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி ஆகியோா் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் முன்னேற்பாடு பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், ஒசூா் சாா் ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அன்பு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மலா்விழி, இணை இயக்குநா் (நலப்பணிகள்) மரு.பரமசிவன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வா் மரு.அசோகன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மரு.வி.கோவிந்தன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா், ஒசூா் மாநகராட்சி ஆணையா் செந்தில்முருகன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) வெங்கடாசலம், கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் காயத்திரி கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com