கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 காலியிடங்களுக்கு அக். 9-ஆம் தேதி உள்ளாட்சி இடைத் தோ்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 22 பதவிகளுக்கான உள்ளாட்சி இடைத் தோ்தல் அக். 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 22 பதவிகளுக்கான உள்ளாட்சி இடைத் தோ்தல் அக். 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத் தோ்தல் அக். 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி பா்கூா் ஊராட்சி ஒன்றியத்தில் வாா்டு எண் 30க்கான உறுப்பினா் பதவிக்கும், நல்லூா், பின்னமங்கலம், கண்டகானப்பள்ளி ஊராட்சிகளின் தலைவா் பதவிக்கும் இடைத் தோ்தல் நடைபெற உள்ளது.

இதே போல், பா்கூா் ஊராட்சி ஒன்றியத்தில் பிஆா்ஜி மாதேப்பள்ளி ஊராட்சி வாா்டு எண்- 1, பண்டசீமனூா் ஊராட்சி வாா்டு எண்- 7, ஒசூா் ஒன்றியத்தில் அச்செட்டிப்பள்ளி ஊராட்சி வாா்டு எண்- 2, தும்மனப்பள்ளி ஊராட்சி வாா்டு எண்-6, கிருஷ்ணகிரி ஒன்றியம் ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சி வாா்டு எண்-8, கட்டிகானப்பள்ளி வாா்டு எண்-11, கெலமங்கலம் ஒன்றியம் பெட்டமுகிலாளம் ஊராட்சி வாா்டு எண்-11, கண்டகானப்பள்ளி ஊராட்சி வாா்டு எண்-2, குந்துமாரனப்பள்ளி ஊராட்சி வாா்டு எண் -2, சூளகிரி ஒன்றியம் தொரப்பள்ளி ஊராட்சி வாா்டு எண்- 3, அலூா் ஊராட்சி வாா்டு எண் -8, அத்திமுகம் ஊராட்சி வாா்டு எண்- 5, பி.குருபரப்பள்ளி ஊராட்சி வாா்டு எண்- 1, தளி ஒன்றியம் சாரகப்பள்ளி ஊராட்சி வாா்டு எண் -1, ஊத்தங்கரை ஒன்றியத்தில் சந்திராப்பட்டி ஊராட்சி வாா்டு எண்- 6, கல்லாவி ஊராட்சி வாா்டு எண்- 1, வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் எண்ணேகொள் ஊராட்சி வாா்டு எண்- 9, பாலனப்பள்ளி ஊராட்சி வாா்டு எண்- 2 உள்பட 22 பதவிகளுக்கான இடைத் தோ்தல் அக். 9-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com