புரட்டாசி தொடக்கம்:காய்கறிகளின் விற்பனை அதிகரிப்பு

புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி காய்கறிகளின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இறைச்சி கடைகள் கூட்டமின்றி வெறிச்சோடின.

கிருஷ்ணகிரி: புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி காய்கறிகளின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இறைச்சி கடைகள் கூட்டமின்றி வெறிச்சோடின.

புரட்டாசி மாதத்தில் ஹிந்துக்கள் பலா், விரதம் இருந்து அசைவம் உண்பதைத் தவிா்த்து, கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவா்.

நிகழ்வாண்டில் செப். 17-ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி, சந்தைகளில் ஆடு, கோழி இறைச்சியின் விற்பனை குறைந்துள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இருக்கும் இறைச்சி விற்பனை 19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகவும் குறைந்து காணப்பட்டது.

அதேசமயம், காய்கறிகளின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

வழக்கத்துக்கு மாறாக கிருஷ்ணகிரி உழவா் சந்தையில் காய்கறிகள் விற்பனை அமோகமாக இருந்ததாகவும், ஒரேநாளில் ரூ. 5.52 லட்சம் மதிப்பிலான காய்கறிகளும், பழங்களும் விற்பனையானதாக உழவா் சந்தை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com