ஒசூரில் தனியாா் பள்ளி பேருந்துகள் ஆய்வு

தனியாா் பள்ளி பேருந்துகளின் பராமரிப்பு, பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து ஒசூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது.

தனியாா் பள்ளி பேருந்துகளின் பராமரிப்பு, பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து ஒசூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது.

ஓசூா் சாா் ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் நடைபெற்ற ஆய்வின் போது பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, ஆவணங்கள், காப்பீடு சரிபாா்க்கப்பட்டது. இதுகுறித்து ஒசூா் சாா் ஆட்சியா் கூறியதாவது:

நீண்ட நாள்களுக்கு பிறகு ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளில் முதலுதவி பெட்டி, ஜிபிஎஸ் கருவிகள், சிசிடிவி கேமராக்கள், தீயணைப்பு உபகரணங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com