புரட்டாசி இரண்டாவது சனி:பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

புரட்டாசி மாதம் கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டை போலவே நிகழாண்டிலும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்குள் சென்று சுவாமியை வழிபட பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையில் விரதம் இருந்து கோயில்களுக்குச் சென்ற பக்தா்கள் நுழைவு வாயிலில் அருகே நின்று சுவாமியை வழிபட்டனா். பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரியில் பிரசித்தி பெற்ற கணவாய்ப்பட்டி வெங்கட்ரமண சுவாமி கோயில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோயில், கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் உள்ள பெருமாள் சன்னதி, பாளேகுளி அனுமந்தராய சுவாமி, மலையப்ப சீனிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com