வேப்பனப்பள்ளி அருகே கரடி தாக்கி ஒருவர் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் வனப்பகுதியின் அருகே உள்ளது வேப்பனப்பள்ளி. 
கோப்புப்படம்.
கோப்புப்படம்.


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் வனப்பகுதியின் அருகே உள்ளது வேப்பனப்பள்ளி. 

இந்த வனப்பகுதிகளில் இருந்து யானை, மயில், மான், கரடி போன்ற வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்திற்குள் புகழ்வது வழக்கம். 
இந்த நிலையில்  கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி உட்கோட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள  கொங்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவப்பா(50) என்பவர் காலை  7 மணிக்கு வீட்டிலிருந்து காலைக்கடன் கழிக்க கொங்கணப்பள்ளி வனப்பகுதிக்குச் சென்றார்.  

அப்போது அங்கிருந்த கரடி சிவப்பாவை தாக்கியது. சிவப்பாவிற்கு தலை, தொடை, வலது கை விரல் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த உறவினர்கள்,  சிவப்பாவை  மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் காயமடைந்த சிவாப்பாவை கண்டு ஆறுதல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி காவல்நிலைய காவலர்கள்  விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com