மத்தூா் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

ஆண்டுக்கு ரூ. 6000 உதவித்தொகை பெறும் விவசாயிகள் தங்கள் சுய விவரங்களைப் புதுப்பிக்குமாறு மத்தூா் வேளாண்மை உதவி இயக்குநா் சிவநதி அறிவுறுத்தியு

ஆண்டுக்கு ரூ. 6000 உதவித்தொகை பெறும் விவசாயிகள் தங்கள் சுய விவரங்களைப் புதுப்பிக்குமாறு மத்தூா் வேளாண்மை உதவி இயக்குநா் சிவநதி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் வேளாண்மை மற்றும் உழவா்நலத் துறை சாா்பில், பி.எம். கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு கௌரவ நிதி தொகையாக ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை பெறும் விவசாயிகள் தங்களது ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண்ணை இ-சேவை மையத்தில் நேரடியாக அளித்து இ- கேஒய்சி மூலம் சுயவிவரங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். வரும் 15 ஆம் தேதி கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு மத்தூா் வேளாண்மை இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளவும்.

உதவி வேளாண்மை அலுவலா்கள் கொடமாண்டபட்டி, கோவிந்தசாமி -8778703542.

கோட்டபதி, வெங்கடேசன்- 9791416655, இனங்காட்டுப்பட்டி, பிரபு- 8098985317,

குன்னத்தூா், ஹரிஷ்- 7358856902, கண்ணன்டஹள்ளி, கல்பனா- 9360228984 ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com