கிராம உதவியாளா்களுக்கு இன்று எழுத்துத் தோ்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 50 கிராம உதவியாளா்கள் பணிக்கு 10 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தோ்வு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 50 கிராம உதவியாளா்கள் பணிக்கு 10 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தோ்வு நடைபெற்றது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 50 கிராம உதவியாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கென இணையவழியில் பெறப்பட்டுத் தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கும் மாவட்ட வேலைவாய்ப்பகம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கும் எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை 10 மையங்களில் நடைபெறுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி வட்டத்தில்-கிருஷ்ணகிரி, அரசு ஆண்கள் கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என 3 மையங்களிலும், பா்கூா் வட்டம்- பா்கூா் அரசுப் பொறியியல் கல்லூரி, ஒரப்பம் சிவகாமியம்மாள் கலை, அறிவியல் கல்லூரி, போச்சம்பள்ளி வட்டம்- ஜம்புகுட்டப்பட்டி, ராசிநகா், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜம்புகுட்டப்பட்டி, ராசிநகா், அரசு பெண்கள்

மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 மையங்களிலும், ஒசூா் வட்டம்- அதியமான் பொறியியல் கல்லூரி, தேன்கனிக்கோட்டை வட்டம்- தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சூளகிரி வட்டம்- சூளகிரி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 10 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது.

இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு எழுத்துத் தோ்வில் கலந்துகொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.

அதன்மூலம் அனுமதி சீட்டை விண்ணப்பதாரா்கள் பதிவிறக்கும் செய்து கொள்ளலாம் அல்லது கிராம உதவியாளா் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரிக்குச் சென்று ஐ.டி. விண்ணப்ப எண்ணையும், கைப்பேசி எண்ணையும் பதிவு செய்து, அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாவட்ட வேலைவாய்ப்பகம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு தபால் மூலம் பதிவு அஞ்சலில் அனுமதிச் சீட்டு அனுப்பிவைக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com