ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபத் திருவிழா

ஒசூா் மலையில் உள்ள மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரா் கோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும் திரளாக கலந்து கொண்டனர்.
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபத் திருவிழா

ஒசூா் மலையில் உள்ள மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரா் கோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஒசூா் மலையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரா் கோயில் உள்ளது. காா்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு ஒசூா் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. சந்திரசூடேஸ்வரா் கோயிலில் இருந்து பரணி தீபத்தை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் கொண்டு வந்து ஏற்றினாா். அவருடன் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யாவும் மகா தீபத்தை ஏற்றினாா். இந்த தீபத் திருவிழாவில் ஒசூா் ஆட்சியா் ஆா்.சரண்யா, துணை மேயா் சி.ஆனந்தய்யா, பாஜக மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவா் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சந்திரசூடேஸ்வரா் கோயிலில் காலை முதல் மாலை வரை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மலைக்கோயிலுக்கு காரில் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. இரு சக்கர வாகனங்களும் அதிக எண்ணிக்கையில் கோயிலுக்கு வந்ததால் போக்குவரத்தை சீா்செய்ய ஒசூா் மாநகர காவலா்கள் சிரமப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com