தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டப் பேரவைத் தொகுதி தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய வட்டாட்சியா் குருநாதன்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய வட்டாட்சியா் குருநாதன்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டப் பேரவைத் தொகுதி தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் குருநாதன் தலைமையில் உறுதிமொழியேற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின்போது, பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பதை தங்கள் கடமையாக கருத வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இளம் வாக்காளா்கள், பொதுமக்களுக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

இதில், தோ்தல் துணை வட்டாட்சியா் அல்லால்கஷ் பாஷா, பள்ளி தாளாளா் சாம்ராஜ், முதல்வா் செல்வராஜ், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

மேலும் இந்த நிகழ்சியில் மாவட்ட அளவில் 3 ஆம் இடம் பிடித்த ஜீவிதா, தாலுக்கா அளவில் நடந்த ஓவியப்போட்டியில் முதலிடம் வென்ற நிவாஷினி, 2 ஆம் இடம் பெற்ற ஷாம்பவி 3ஆம் இடத்தை பிடித்த மோனிகா, ஸ்லோகன் வாசிப்பதில் 2 ஆம் இடம் பிடித்த மாணவி தாமரைச்செல்வி உள்ளிட்டோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com