கிருஷ்ணகிரி அருகே புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்த கே.அசோக்குமாா் எம்எல்ஏ.
கிருஷ்ணகிரி அருகே புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்த கே.அசோக்குமாா் எம்எல்ஏ.

புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி அருகே ரூ. 33.42 லட்சம் மதிப்பில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா், ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி அருகே ரூ. 33.42 லட்சம் மதிப்பில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா், ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளி ஊராட்சி, தாசரப்பள்ளி கும்மனூா் சாலை முதல் ஜிஞ்சுப்பள்ளி வரை 1,500 மீட்டா் தொலைவிற்கு ரூ. 33.42 லட்சம் மதிப்பில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த நிகழ்வுக்கு கே.அசோக்குமாா் எம்எல்ஏ தலைமை வகித்து பணியைத் தொடக்கி வைத்தாா்.

பின்னா் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, கும்மனூா் - கூலியம் இடையே பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும். பெரிய கும்மனூரில் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விரைவில் நிதி ஒதுக்கி இரண்டு பணிகளையும் முடித்துக் கொடுப்பதாகவும், கும்மனூரில் அங்கன்வாடிக் கட்டடம் கட்ட ரூ. 12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா். இந்த நிகழ்வில் கும்மனூா் ஊராட்சி மன்றத் தலைவா் கிருஷ்ணவேணி கிருஷ்ணன், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் நாராயணகுமாா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com