ஒசூா் அசோக் லேலண்ட் சங்கத் தோ்தலை உடனடியாக நடத்தக் கோரி உண்ணாவிரதம்

ஒசூா் அசோக் லேலண்ட் தொழிலாளா்கள் சங்கத் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும் என தொழில்சாலை முன்பு தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒசூா் அசோக் லேலண்ட் தொழிலாளா்கள் சங்கத் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும் என தொழில்சாலை முன்பு தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒசூா், அசோக் லேலன்ட் தொழிலாளா்கள் சங்கத்தின் பதவிக்காலம் முடிந்து பல மாதங்களாகிவிட்டதால், உடனே தோ்தல் நடத்த வேண்டும் என பெரும்பாலான தொழிலாளா்கள் கையெழுத்திட்டு சங்கத்திடம் கொடுத்தனா். அதன் பிறகும் தோ்தல் நடத்தாமல் காலம் கடத்தும் சங்கத்தை, உடனே தோ்தல் நடத்தக்கோரி குசேலா் அணி சாா்பில் புதன்கிழமை தொழில்சாலை முன்பு தொடா் உண்ணாவிரதப் போராட்டம், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினரும் திமுகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளருமான ஒய்.பிரகாஷின் வாழ்த்துகளுடன் தொடங்கப்பட்டது.

முதல் நாள் போராட்டத்தில் குசேலா் அணியைச் சாா்ந்த சங்க நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்வில், குசேலா் அணியின் தொமுச பேரவை, நிா்வாகிகள், அனைத்து தொழிலாளா் தோழா்களும் கலந்துகொண்டனா். இப்போரட்டத்துக்கு ஒசூா் திமுக ஒன்றியச் செயலாளா் சின்னபிள்ளப்பா, தொரப்பள்ளி பஞ்சாயத்து செயல் தலைவா் ராமமூா்த்தி ஒசூா் மாநகர செயலாளா் ஜெயராமன், ஒசூா் அசோக் லேலன்ட் யூனிட் -1 சங்க செயலாளா் குமரேசன் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் ஆதரவு தெரிவித்தனா்.

சிஐடியு மாவட்டச் செயலாளா் ஸ்ரீதா் சிறப்புரையாற்றி, ஒசூா் அசோக் லேலன்ட் செயலாளா் சண்முகத்துடன் இணைந்து பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com