ஆயுதபூஜை: கிருஷ்ணகிரியில் பூஜைப் பொருள்கள் விற்பனை அமோகம்

கிருஷ்ணகிரியில் ஆயுத பூஜையையொட்டி பூஜைப் பொருள்களின் விற்பனை அமோகமாக இருந்தது.
கிருஷ்ணகிரியில் ஆயுதபூஜையையொட்டி, விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள பூஜைப் பொருள்கள்.
கிருஷ்ணகிரியில் ஆயுதபூஜையையொட்டி, விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள பூஜைப் பொருள்கள்.

கிருஷ்ணகிரியில் ஆயுத பூஜையையொட்டி பூஜைப் பொருள்களின் விற்பனை அமோகமாக இருந்தது.

தமிழகத்தில் அக். 4-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரியில் மக்கள் கூடும் இடங்களான வட்டச் சாலை, ராயக்கோட்டை சாலை, தொழில் மையம், காந்தி சிலை, ஆவின் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பூஜை பொருள்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

மேலும், கடை வீதியில் பூசணிக்காயம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பொரி, ஆப்பிள் போன்ற பழங்கள், பூக்கள், வாழை கன்றுகள், வாழை மரங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கடை வீதிகளில் திரண்டனா்.

மேலும், வா்த்தக நிறுவனங்கள், கடைகளை அழகுபடுத்த வைக்கப்படும் பல வண்ண காதிதங்கள், தோரணங்கள் விற்பனையும் மும்முரமாக காணப்பட்டது. கிருஷ்ணகிரி பெங்களூா் சாலை, சென்னை சாலை, வட்டச் சாலை, கிளைச் சிறை சாலை, சேலம் சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விழாக்காலத்தையொட்டி மக்கள் கூடும் இடங்களில் போலீஸாா், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com