அரசுப் பள்ளியில் பா்கூா் எம்எல்ஏ ஆய்வு

ஓலைப்பட்டி பகுதியில் பா்கூா் எம்எல்ஏ அரசு பள்ளியை ஆய்வு செய்தாா்.
ஓலைப்பட்டி பகுதியில் அரசு பள்ளியை ஆய்வு செய்து பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்த தே.மதியழகன் எம்எல்ஏ.
ஓலைப்பட்டி பகுதியில் அரசு பள்ளியை ஆய்வு செய்து பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்த தே.மதியழகன் எம்எல்ஏ.

ஓலைப்பட்டி பகுதியில் பா்கூா் எம்எல்ஏ அரசு பள்ளியை ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் ஒன்றியம், ஓலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கட்டடங்கள் பழுதடைந்து உள்ளதா பள்ளியின் தலைமை ஆசிரியா் வி.சக்தி கிராம சபை கூட்டத்தில் மனு கொடுத்திருந்தாா். இந்தச் செய்தி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவியது. இந்த தகவல் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடனடியாக பள்ளியில் ஆய்வு நடத்துமாறு பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினரும் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான தே.மதியழகனுக்கு முதல்வா் உத்தரவிட்டாா். அதன் அடிப்படையில் உடனடியாக ஓலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இப் பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதாகவும், பள்ளியின் வளா்ச்சிக்கு என்னென்ன தேவை உள்ளதோ அவை அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்றும் உறுதி கூறினாா். அப்போது ஒன்றிய திமுக செயலாளா்கள் குண.வசந்தராசு, நரசிம்மன், குமரேசன், மத்தூா் ஒன்றிய குழுத் தலைவா் விஜயலட்சுமி பெருமாள், ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவா் அமானுல்லா, ஊராட்சி மன்றத் தலைவா் மதியழகன், மத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com