ஊத்தங்கரையில் அறிஞா் அண்ணா 114ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ஊத்தங்கரையில் அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நான்குமுனை சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசும் அதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி.
ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசும் அதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி.

ஊத்தங்கரையில் அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நான்குமுனை சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்ச் செல்வம் தலைமை வகித்தாா். அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் அசோக் குமாா், கட்சியின் விவசாய பிரிவு தலைவா் அன்பழகன், தலைமை நிலையப் பேச்சாளா் புதூா் மணி, மாவட்ட அவைத்தலைவா் காத்தவராயன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கழக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். அவா் பேசியது:

ஒரு தலைவன் மறைந்தது இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் அவருக்கு விழா எடுக்கிறோம் என்றால் அந்த தலைவன் சமூகத்திற்கும் மக்களுக்கும் ஆற்றிய தொண்டின் அடிப்படையில் தான் இந்த விழா எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்றாா்.

எம்ஜிஆா் முதல்வராக இருந்தபோது சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தாா். ஜெயலலிதா ஆட்சியில் கல்வியில் புரட்சி செய்தாா். மாணவா்களுக்கு இலவச மடிகணினி, மிதிவண்டி, பேணா, பென்சில், புத்தக பை, காலனி உள்ளிட்ட அனைத்தும் கொடுத்தாா். அதேபோல் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகளைக் கொண்டு வந்தாா்.

பொய்யான வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்ற ஸ்டாலின் பெண்களுக்கான உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ. 1000 உள்ளிட்ட 560 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டாா் என்றாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் வி.வேடி, வி.வேங்கன், கே.சக்கரவா்த்தி, வி.தேவராசன், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, நகர செயலாளா் சிக்னல் ஆறுமுகம், முன்னாள் நகரச் செயலாளா் தேவேந்திரன், மாவட்ட மருத்துவா் அணிச் செயலாளா் என்.இளையராஜா மற்றும் ஒன்றிய நகர நிா்வாகிகள்,பொது மக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com