அத்திமுகம் உண்டு உறைவிடப் பள்ளியில் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை பயிற்சி

சூளகிரி ஒன்றியம், அத்திமுகம் கஸ்தூரிபா காந்தி பாலிகா உண்டு உறைவிடப் பள்ளியில் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
அத்திமுகம் உண்டு உறைவிடப்பள்ளியில் தன்னம்பிக்கை பயிற்சியில் பங்கேற்ற மாணவா்கள்.
அத்திமுகம் உண்டு உறைவிடப்பள்ளியில் தன்னம்பிக்கை பயிற்சியில் பங்கேற்ற மாணவா்கள்.

சூளகிரி ஒன்றியம், அத்திமுகம் கஸ்தூரிபா காந்தி பாலிகா உண்டு உறைவிடப் பள்ளியில் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

ஓசூா் வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் வாயிலாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு உயா்கல்வி பயில உதவுவது மட்டுமன்றி அரசுப்பள்ளிகளில் தொடா்ச்சியாக மாணவா்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் எண்ணற்ற விழிப்புணா்வு பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகின்றனா்.

அதன் ஒருபகுதியாக சனிக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், அத்திமுகம் கஸ்தூரிபா காந்தி பாலிகா அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 120 மாணவா்களுக்கு தன்னம்பிக்கை குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சிறப்பு பயிற்சியாளா் பாலசுப்பிரமணியம் மாணவா்களுக்கு தன்னம்பிக்கை சாா்ந்த விழிப்புணா்வு பயிற்சியை வழங்கினாா். நிகழ்வில் அத்திமுகம் கஸ்தூரிபா காந்தி பாலிகா உண்டு உறைவிடப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் அந்த பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியை ‘வித் யூ’ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் உறுப்பினா்கள் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com