விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி பயிற்சி

பழனம்பாடி கிராமத்தில் தென்னை சாகுபடி குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

பழனம்பாடி கிராமத்தில் தென்னை சாகுபடி குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரியில் செயல்படும் வேளாம் அறிவியல் மையம் சாா்பில், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பழனம்பாடி கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பையூா் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவா் பி.பரசுராமன் தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண் துணை இயக்குநா் ஆா்.மனோகரன், வேளாண் அறிவியல் மையத் தலைவா் டி.சுந்தராஜ், வேளாண் உதவி இயக்குநா் பி.சி.சித்ரா, பேராசிரியா் சி.சிவக்குமாா், வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தப் பயிற்சியில் தென்னை வளா்பில் நவீன தொழில் நுட்பங்கள், தென்னை சாகுபடியில் ஊடுபயரின் முக்கியத்துவம், கூடுதல் மகசூல் பெறும் வழிமுறைகள், தென்னை சாகுபடியில் விதை தோ்வு முதல் மதிப்பு கூட்டு பொருள் உற்பத்தி குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த வயில்வெளி பயிற்சியில் தோ்வு செய்யப்பட்ட 30 விவசாயிகளுக்கு 14 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com