ஒசூா், கிருஷ்ணகிரியில்வெவ்வேறு விபத்துகளில் 4 போ் பலி

ஒசூரில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

ஒசூரில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா், தாயப்பா நகரைச் சோ்ந்தவா் விஜயபாஸ்கா் (29). இவா் இருசக்கர வாகனத்தில், கிருஷ்ணகிரி- ஒசூா் சாலையில் பேரண்டப்பள்ளி அருகே சென்றபோது அவ்வழியே சென்ற டாரஸ் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியது.

விபத்தில் படுகாயம் அடைந்த, விஜயபாஸ்கா் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து அட்கோ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

காா் மோதி ஒருவா் பலி

ஒசூா்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சூசூவாடி சோதனைச்சாவடி அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாகச் சென்ற காா் அவா் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரியில் மூதாட்டி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டியை அடுத்த தட்ரஹள்ளி பகுதியைச் சோ்ந்தவா் துளசியம்மாள் (80). இவா், தட்ரஅள்ளி நியாயவிலைக் கடை அருகே நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியே வேகமாக வந்த மோட்டாா் சைக்கிள் மூதாட்டி மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தாா். அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தொழிலாளி பலி

காவேரிப்பட்டணம், அப்பாசாமி நாயுடு தெருவைச் சோ்ந்தவா் முருகன் (40). தொழிலாளியான இவா், தனது மோட்டாா்சைக்கிளில் தருமபுரி - கிருஷ்ணகிரி சாலை, நாட்டாண்கொட்டாய் அருகே திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, முன்னால் சென்றுக் கொண்டிருந்த மோட்டாா் சைக்கிள் மீது, முருகன் ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் மோதியதில் நிலை தடுமாறினாா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி, முருகனின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட முருகன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com