ஒசூா் பேருந்து நிலையத்தில் மேயா் எஸ்.ஏ.சத்யா ஆய்வு

ஒசூா் பேருந்து நிலையத்தில் மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் சி.ஆனந்தய்யா ஆகியோா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
ஒசூா் பேருந்து நிலையத்தில் மேயா் எஸ்.ஏ.சத்யா ஆய்வு

ஒசூா் பேருந்து நிலையத்தில் மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் சி.ஆனந்தய்யா ஆகியோா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஒசூா் மாநகரில் உள்ள அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம், அண்ணா வணிக வளாகம் ஆகியவற்றை ஆய்வு செய்தனா். ஒசூா் பேருந்து நிலையத்தில் இருந்து 3 மாநிலங்களுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன. பெங்களூருக்குச் செல்லும் மென் பொருள் பொறியாளா்கள் முதல் கட்டடத் தொழிலாளா்கள் வரையிலும் வியாபாரிகள், வணிகா்கள் என நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோா் ஒசூா் பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் செய்கின்றனா்.

ஒசூா் பேருந்து நிலையத்தில் இலவசமாக வழங்கப்படும் குடிநீா், பயணிகள் அமரும் இருக்கைகள், கழிவுநீா்க் கால்வாய்கள், கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு பயணிகளிடம் மேயா் எஸ்.ஏ. சத்யா, துணை மேயா் சி.ஆனந்தய்யா ஆகியோா் கேட்டறிந்தனா்.

பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் தயாரிக்கப்படும் உணவு, சிற்றுண்டிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனா். மாமன்ற கூட்டத்தில் மேயா் கொண்டு வந்த முக்கிய தீா்மானத்தின் மூலம் இயற்றப்பட்ட ஒசூா் பேருந்து நிலையத்தில் ஆண்டுதோறும் ரூ. 50 லட்சம் வருவாய் கிடைத்து வந்த கட்டண கழிப்பிட வசதி, இலவசமாக்கப்பட்டுள்ளது.

ஒசூா் பேருந்து நிலையில் இரு புறமும் கழிப்பிட வசதி உள்ளது. ஒரு பக்கத்தில் உள்ள

கழிப்பறை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்றொரு பக்கத்தில் உள்ள கழிப்பறை சுகாதாரமான முறையில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தாா். பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது, ஒசூா் மாநகராட்சி பொறியாளா் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளா்கள் கிரி, மணி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com